Wednesday, May 31, 2017


தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
        (Information Communication Technology)

                                                         
created by: M.A.F.SAJITHA 
                                                               

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்றால் என்ன?
(What Is Information Communication Technology?)
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்பது தகவலை செயன்முறைப்படுத்துவதற்கு தே​வைப்படும் ஒரு  தொழில்நுட்பம் ஆகும்.
குறிப்பாக  இவை Electronic Computers, Communication Devices மற்றும் Software Application களில்    தகவலை மாற்ற (to convert), store, protect, process ,transmit,மீளப்பெற (retrieve) முடியும்.
தகவல் தொடர்பாடலும், தொடர்பாடல் தொழில்நுட்பமும் இணைந்தது தகவல்தொடர்பாடல் தொழில்நுட்பம் என சுருக்கமாக கூறலாம்.
தகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன​?
(What Is ​ ​Information Technology?)
தொழில்நுட்பமானது, விஞ்ஞான அறிவிற்கு உதவுவதாகவும், அனுபவம் செய்முறைகளை உருவாக்குவதற்கான வளங்கள் மற்றும்  ற்பத்திகள் மூலம் மனி​த தேவைகளை பூரணப்படுத்தப்படுகிறது.
தகவல் (information) என்பது Reading, Investigation, Study அல்லது Researchமூலம்பெறப்பட்ட அறிவு ஆகும்.
தகவலை​சேமிக்க, பாதுகாக்க, அனுப்ப, மற்றும் பெறுவதற்காக பயன்படுத்தப்படும்ஒரு பிரயோகமே தகவல் தொழில்நுட்பம் (Information Technology) எனப்படும்​.
தகவல் தொழில்நுட்பம் என்பதன் விரிவான கருத்து யாதெனில்இலத்திரனியல்கணினியல்தொலைத்தொடர்பு போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவலை ஒரு செயன்முறைக்கு உட்படுத்தி ஒழுங்கமைப்பு செய்தல்,பரிமாற்றம் செய்தல் போன்ற செயற்பாடுகளை உள்ளடக்கியது தகவல்தொழில்நுட்பம் எனப்படும்.
தொடர்பாடல் தொழில்நுட்பம் என்றால் என்ன?
(What Is Communication Technology?)
எமது அன்றாட செயற்பாடுகளை எளிதாக்க தொடர்பாடலானது விரிவுபடுத்தப்பட்டும், மேம்படுத்தப்பட்டும் உள்ளது.​​ இந்த 21ம் நூற்றாண்டில் தொடர்பாடலை பயன்படுத்தி தொழில்நுட்பத்தின் ஊடாக பரந்த பார்வையாளர்களுக்கு தகவலை சென்றடையச் செய்வதாக உள்ளது.
தகவலானது பல்வேறு வழிமுறைகளில் பரவலாக்கப்படுகிறது. அதாவது cellular phone களின் கண்டுபிடிப்பு, தொலைக்காட்சி (Television) மற்றும்​ வேறு மின்னியல் சாதனங்கள் (electronic Devices) போன்றவை தொடர்பாடலை மேம்படுத்த முக்கியமானவை ஆகும்.
தொடர்பாடல் கருவிகளை செயற்படுத்தல், பராமரித்தல், மற்றும் புதுப்பித்தல்போன்றவற்றிற்கான அறிவு தொடர்பாடல் தொழில்நுட்பம் எனப்படும்.
தொடர்பாடல்  தொழில்நுட்பம் என்பதன் விரிவான கருத்து யாதெனில் ஒருஇடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு தொழில்நுட்ப முறைகளைபயன்படுத்துவதன்  ஊடாக தகவலை கடத்தும் முறைமையே தொடர்பாடல் தொழில்நுட்பம் எனப்படும்.

யுனிகோட்(Unicode)
உலகில் உள்ள  மொழிகள் எல்லாவற்றிற்கும் ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற  உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகுதரமே யுனிகோட் ஆகும். இதில் சில இந்திய மொழிகளோடு தமிழுக்கு என்ற தனியிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளின் வரிவடிவங்களை ஒழுங்குபடுத்திவரையப்பட்டுள்ள ஒரு நியமமே இந்த யுனிகோட் ஆகும்.
உதாரணமாக தமிழ், சிங்களம், இந்தி, மலையாளம், சீன மொழிஅரேபிய மொழிஇவற்றுள் அடங்கும்.
இந்த யுனிகோட் முறை மூலம் பதிப்பிக்கப்பட்ட  கதைகள், கவிதைகள், கட்டுரைகளை நாம் Google, Yahoo, MSN  போன்ற தேடுதளங்களின்  மூலம் தமிழிலேயே தேடுகின்ற வாய்ப்பும் நமக்கு கிடைத்திருக்கிறது. இத்துடன் இத்தகுதளத்தை உலகிலுள்​ள பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களாலும் அங்கீகரிக்கப்பட்டமையால்  இதற்கு வளமான எதிர்காலம் உண்டு.
இன்றைய நிலையில் யுனிகோட் குறியீட்டினை windows 2000 மற்றும் windows xp ,லதா என்ற யுனிகோட் எழுத்துரு சேர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால் எல்லா கணினிகளிலும் இந்த யுனிகோட் எழுத்துருவைபடிக்கலாம்.அனுப்புபவர்  யுனிகோடில் தட்டச்சு செய்வதன் ஊடாக பெறுபவர்அதை எந்த ஒரு  எழுத்துருவில் வைத்தும் பிரச்சினையின்றி படிக்கலாம்.
விசைப்பலகை  என்றால் என்ன?
கணினிக்குரிய கட்டளைகளை வழங்கும் அல்லது தகவல்களை உள்ளீடுசெய்ய உதவும்  ஒருவெவளிப்புறக் கருவி ஆகும்.
இந்த விசைப்பலகைகளில் எழுத்துகள், எண்கள், குறிகள் கட்டளைகள் ஆகிய விசைகள் அடுத்தடுத்து இருக்கும்.
.தேவைக்கு ஏற்ப இந்த விசைளை தட்டுவதன் மூலம் கணினிக்கு கட்டளைகளையும் உள்ளீடுகளையும் வழங்கலாம்.
தமிழில் தட்டச்சு செய்ய பயன்படுத்தப்படும் விசைப்பலகைகள்.
  • «                தமிழ் 99 விசைப்பலகை
 தமிழ் நாட்டு அரசினால் ஏற்பு பெற்ற தமிழ் மொழிக்கான தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை ஆகும்.​
  • «            திபஸ்
  • «            இன் ஸ்கிரிப்ட் விசைப்பலகை
  • «          ரெங்கநாதன் விசைப்பலகை  ​(இலங்கை அரசினால்  சீர்படுத்தப்பட்ட தமிழ்  விசைப்பலகை ஆகும்.)
எழுத்துரு (font)
ஒரு மொழியினை எழுதுவதற்கு  பயன்படும் வடிவம் எழுத்துரு எனப்படும்.ஒவ்வொரு எழுத்தும் பல்வேறு புள்ளிகளைக் கொண்ட ஒரு ஓவியம் ​கொண்டே கணினியில் காட்சிப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு எழுத்தும் அடிப்படை உருவம் மாறாமல் பல்வேறு வடிவத்தில் ஓவியங்களாக இருக்கும்.அதை Font Faceஎன்போம். ஆங்கிலத்தில் Arial, Georgia, Calibri போல்அந்த ஓவியத்திற்கு ஒரு அடையாள இலக்கத்தை வைத்தே அதைக் கணினி புரிந்து கொள்கிறது. இதைக் குறியாக்க முறை (Encoding) என்கிறோம்.
ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்குச் செல்லும் போது அதே குறியாக்கத்தில் இருந்தால் எழுத்துக்கள் சரியாக தெரியும்.மாறாக வேறு குறியாக்கத்தில் இருந்தால் எழுத்துக்களை மாற்றிக்காட்டிவிடும். பாமினி, அஞ்சல், கபிலன், கனியன், மயிலை போன்ற எழுத்துருக்கள் தனித்தனி குறியாக்கத்தை கொண்டிருந்தன.  (எழுத்துரு என்பது font, குறியாக்கம் என்பது  அதன் encoding)   tam, tab, bamini, Anjali போன்ற குறியாக்கங்களும் அன்று இருந்தன. ஒரு குறியாக்கத்தில் பல எழுத்துருவை உருவாக்கி பயன்படுத்தி வந்தனர். இம் முறையில் காணப்பட்ட சிக்கல் காரணமாக  1988 அனைவரும் பயன்படுத்தத்தக்க எழுத்துருவிற்கு சீரான குறியாக்கத்தை உருவாக்கினர். அவை  8Bit-TSCII , 16Bit-TACE
TSCII முறைக்கென்று கோமதி, ஜனனி, கண்ணதாசன், டைம்ஸ் என்ற எழுத்துரு வெளிவந்தது.
அதற்கு இணையாக உலகளவில் அனைத்து மொழிகளுக்கும்  ஏற்ப ஒருங்குறி தகுதரம் அமைக்கப்பட்டு 1991 இல் தமிழ் அதில் அறிமுகமானது.  அதாவது ஒவ்வொரு எழுத்திற்கு ஒரு எண் வழங்கப்பட்டது. அதன்படி “ அ ”  என்றால் 2949என்று வழஙகப்பட்டிருக்கும். எனவே எல்லாக் கணினியிலும் இப்படி ஒரே எண்கள் இருந்தால் எல்லா எழுத்துருவும் சீராக காட்சி தரும். இந்த எண்னை அடிப்படையாகக் கொண்டே ஒருங்குறி எழுத்துகள் பல அறிமுகமானது. 2005Microsoft  லதா என்ற தமிழ் எழுத்துருவை அறிமுகம் செய்தது.
இதேபோல உலக மொழிகள் எந்த எழுத்துருவை பயன்படுத்தினாலும் கணினியை பொருத்தமட்டில் எழுத்துக்கள் எல்லாம் எண்கள் மட்டுமேயாகும். அது என்ன எண் என்பதை அவர்கள் பயன்படுத்தும் குறியாக்க முறையே முடிவு செய்யும்.

Wednesday, November 16, 2016

MOST BEAUTIFUL PLACE IN SRI LANKA.

Royal Botanical Gardens, Peradeniya

Royal Botanic Gardens, Peradeniya are about 5.5 km to the west of the city of Kandy in the Central Province of Sri Lanka. It attracts 2 million visitors annually. It is near the Mahaweli River. It is renowned for its collection of orchids.

Wednesday, November 9, 2016

LATEST US PRESIDENT RESULT


Monday, October 10, 2016



                                                              PARROT FISH






Parrotfish are a large group of marine species inhabiting shallow coastal waters in tropical and subtropical oceans throughout the world. Their largest species richness is in the Indo-Pacific.
Scientific nameScaridae
RankFamily









As Old as Ice

Chunks of ice in an Icelandic glacial lagoon reveal ages of wear and tear.